இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரம் நிர்ணயம்: டிராய்


இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரம் நிர்ணயம்: டிராய்
x
தினத்தந்தி 1 Nov 2019 2:07 PM GMT (Updated: 2019-11-01T19:43:25+05:30)

செல்போன் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசிகளில் இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரத்தை டிராய் நிர்ணயம் செய்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் இன்கமிங் அழைப்பிற்கு 45 நொடிகளை வைத்திருந்த நிலையில், சமீபத்தில் ஜியோ மட்டும் 20 நொடிகளாக குறைத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மற்ற சில நிறுவனங்கள்,  இன்கமிங் அழைப்புக்கான நேரத்தை 25 நொடிகளாக குறைக்கவுள்ளதாக முடிவெடுத்தது.

இதனையடுத்து, நீண்ட ஆலோசனைக்கு பின், செல்போன் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசிகளில் இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரத்தை  நிர்ணயம் செய்து டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக டிராய் விடுத்துள்ள அறிக்கையில், இனி இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரங்கள், செல்போனில் 30 விநாடிகளாகவும், லேண்ட்லைன் தொலைபேசிகளில் ஒரு நிமிடமாகவும் நிர்ணயம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story