டெல்லியில் தொழிற்சாலையில் தீ விபத்து; 3 தீயணைப்பு வீரர்கள் தீக்காயம்


டெல்லியில் தொழிற்சாலையில் தீ விபத்து; 3 தீயணைப்பு வீரர்கள் தீக்காயம்
x
தினத்தந்தி 4 Nov 2019 6:42 AM IST (Updated: 4 Nov 2019 6:42 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற 3 தீயணைப்பு வீரர்கள் தீக்காயம் அடைந்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் பீராகார்ஹி பகுதியில் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.  4 அடுக்குகள் கொண்ட இந்த தொழிற்சாலையில் திடீரென நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.

தொடர்ந்து இந்த தீ அடுத்த கட்டிடத்திற்கும் பரவியது.  இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 28 தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்றுள்ளன.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 3 வீரர்கள் காயமடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து தீயை அணைக்கும் பணியானது நடந்து வருகிறது.

Next Story