பாஜக சதி செய்வதாக சிவசேனா குற்றச்சாட்டு -மராட்டியத்தில் தொடரும் அரசியல் குழப்பம்


பாஜக சதி செய்வதாக சிவசேனா குற்றச்சாட்டு -மராட்டியத்தில் தொடரும் அரசியல் குழப்பம்
x
தினத்தந்தி 6 Nov 2019 5:40 AM GMT (Updated: 6 Nov 2019 5:40 AM GMT)

பாஜக சதி செய்வதாக சிவசேனா குற்றஞ்சாட்டி உள்ளது இதனால் மராட்டியத்தில் அரசியல் குழப்பம் தொடர்ந்து வருகிறது.

மும்பை

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், முதல் அமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் அதன் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார். 

மராட்டியத்தில் அரசு அமைப்பதற்கு சிவசேனா 2 நாட்கள் காலக்கெடுவை நிர்ணயித்து உள்ளது. முதலமைச்சர் பதவிக்கான கோரிக்கையை உறுதி படுத்தியதுடன்  புதிய விருப்பங்கள் எதுவும்  பாஜகவுடன் விவாதிக்கப்படாது என்றும் கூறி உள்ளது.

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறியதாவது:-

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் நாங்கள் ஒப்புக்கொண்ட திட்டம் குறித்து மட்டுமே நாங்கள் விவாதிப்போம். புதிய திட்டங்கள் எதுவும் இப்போது பரிமாறப்படாது. பாஜக மற்றும் சிவசேனா இடையே தேர்தல்களுக்கு முன்னர் முதல்வர் பதவி குறித்து ஒரு  உடன்பாடு ஏற்பட்டு இருந்தது. அதன் பின்னரே  நாங்கள் தேர்தலுக்கான கூட்டணிக்கு முன்னேறினோம்.

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தினால் அது மக்களுக்கு  அநியாயமாக இருக்கும். ஜனாதிபதி ஆட்சி அமைந்தால் அதற்கு  நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். சிவசேனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. சதி செய்பவர்கள் மக்களின் ஆணையை அவமதிக்கிறார்கள் என கூறினார்.

Next Story