இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் செர்பியாவிற்கு சுற்றுப்பயணம்
இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று செர்பியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், செர்பியா நாட்டின் பிரதமரும், வெளியுறவு துறை அமைச்சருமான இவிகா டாசிக் அழைப்பு விடுத்ததன் பேரில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் செர்பியாவிற்கு நவம்பர் 7 ஆம் தேதி(இன்று) முதல் 9 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையே ஒரு நல்ல நட்புறவு நிலவி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செர்பியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது போன்ற அரசு முறை சார்ந்த பயணங்களால் இரு நாடுளுக்கும் இடையேயான இருதரப்பு உறவு மேம்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது செர்பியா நாட்டின் ஜனாதிபதியை ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, கூட்டு ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story