உ.பி அதிகாரிகளுடன் தலைமை நீதிபதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை நீதிபதி ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து விரும்பத்தகாத விளைவுகள் நடந்து விடாதபடிக்கு பார்த்துக்கொள்வதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அம்மாநில தலைமைச்செயலாளர், காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக, உ.பி அதிகாரிகள் தனது சேம்பருக்கு வருமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story