பாபர் மசூதியை இடித்த பல்பீர் சிங்: வருத்தம் தெரிவித்த தந்தையால் மனம் மாறி 90 மசூதிகளை கட்டினார்


பாபர் மசூதியை இடித்த பல்பீர் சிங்: வருத்தம் தெரிவித்த தந்தையால் மனம் மாறி 90 மசூதிகளை கட்டினார்
x
தினத்தந்தி 9 Nov 2019 6:04 PM IST (Updated: 9 Nov 2019 6:04 PM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதியை இடித்த பல்பீர் சிங், முகமது அமீராக மதம் மாறி 90 மசூதிகளை கட்டியுள்ளார்.

லக்னோ,

பாபர் மசூதியை இடித்த பல்பீர் சிங், முகமது அமீராக மதம் மாறி 90 மசூதிகளை கட்டியுள்ளார். பாபர் மசூதியின் குவிமாடத்தில் முதலில் ஏறியவர் பல்பீர் சிங். கரசேவகர்களுடன் இணைந்து மூலம் குவிமாடத்தை தாக்கி நிர்மூலம் செய்தார். 

சொந்த ஊரான பானிபட்டில் கதாநாயகன் போல மக்களால் வரவேற்கப்பட்டார். பல்பீர் சிங் செயலால் பள்ளி ஆசிரியரான அவரது தந்தை வருத்தம் அடைந்தார். குற்ற உணர்வு அடைந்த பல்பீர் சிங், தனது தவறை உணர்ந்து இஸ்லாமியராக மதம் மாறினார். 

முகமது அமீர் என பெயர் மாற்றிக் கொண்ட பல்பீர் சிங், இஸ்லாமிய பள்ளியை நடத்தி வருகிறார். இதுவரை 90 மசூதிகளை கட்டியதுடன், மசூதிகளை பாதுகாக்கவும் உழைக்கிறார் என்பதே அவரின் சுவாரஷ்யம் ஆகும்.

Next Story