டெல்லி காற்று மாசுபாடு : பஞ்சாப், அரியானா, உ.பி., டெல்லி தலைமைச் செயலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் சம்மன்


டெல்லி காற்று மாசுபாடு : பஞ்சாப், அரியானா, உ.பி., டெல்லி தலைமைச் செயலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் சம்மன்
x
தினத்தந்தி 15 Nov 2019 1:06 PM GMT (Updated: 15 Nov 2019 1:06 PM GMT)

டெல்லி காற்று மாசுபாட்டை குறைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்க பஞ்சாப், அரியானா, உ.பி., டெல்லி தலைமைச் செயலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் காற்று அதிக மாசு அடைந்துள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்க  எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிய பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி தலைமைச் செயலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று  சம்மன் அனுப்பியுள்ளது.

நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு காற்று மாசு குறித்து பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், டெல்லியில் உள்ள 13 மாசுபாடான இடங்களில் உள்ள  மாசுபடுத்தும் பொருட்களை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

Next Story