தேசிய செய்திகள்

பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம் + "||" + Bihar: 4 dead, 5 injured after boiler exploded in East Champaran

பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்

பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்
பீகார்: சமையலறையில் பாய்லர் வெடித்து 4 பேர் பலியானார்கள்; 5 பேர் காயம் அடைந்தனர்.
மோதிஹரி:

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரனில் மோதிஹரி அருகே சுகாலி பகுதியில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் உள்ளது. இன்று அதிகாலை தொண்டு நிறுவனத்தின் சமையலறையில் தொழிலாளர்கள் பல பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு  மதிய உணவு  தயாரித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில்  சமையலறையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. 

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இதில் ஒருவர் மட்டும் முசாபர்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் சட்டசபைக்கு வெங்காய மாலை அணிந்து வந்த எம்.எல்.ஏ.
பீகாரில் சட்டசபைக்கு எம்.எல்.ஏ. ஒருவர் வெங்காய மாலை அணிந்து வந்தார்.
2. பீகாரில் கடைக்கு வெளியே குண்டுகள் வெடிப்பு
பீகாரில் கடைக்கு வெளியே குண்டுகள் வெடிப்பு நிகழ்ந்தது.
3. பீகாரில் பட்டப்பகலில் பயங்கரம்: நிதி நிறுவனத்தில் 55 கிலோ தங்கம் கொள்ளை - துப்பாக்கிமுனையில் கைவரிசை
பீகாரில் பட்டப்பகலில், நிதி நிறுவனத்தில் துப்பாக்கிமுனையில் 55 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
4. பீகாரில் ஆளில்லாத வீட்டில் வெடிகுண்டுகள்
பீகாரில் ஆளில்லாத வீட்டில் வெடிகுண்டுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5. பீகாரில் குடும்பநல கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் படுகாயம்
பீகார் மாநிலத்தில் குடும்ப நல நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.