திருப்பதி லட்டுகளின் விலை உயர்த்தப்பட மாட்டாது : திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தகவல்
திருப்பதி லட்டுகளின் விலை உயர்த்தப்பட மாட்டாது என, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில், புதிய அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் சேகர் ரெட்டி உள்ளிட்டோர், உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப்பா ரெட்டி,
திருப்பதி லட்டுகளின் விலையை உயர்த்துவது தொடர்பாக எந்த எண்ணமும் இல்லை என்றும், திருமலையில் பக்தர்கள் தங்கும் விடுதியில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். அங்கு ஆடம்பர உயர் வகுப்பு அறைகளின் கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story