அதிசயம், அதிர்ஷ்டத்தை ரஜினி நம்பலாம்; ஆனால் நாங்கள் மக்களை, வாக்காளர்களை மட்டுமே நம்புகிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்


அதிசயம், அதிர்ஷ்டத்தை ரஜினி நம்பலாம்; ஆனால் நாங்கள் மக்களை, வாக்காளர்களை மட்டுமே நம்புகிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 18 Nov 2019 6:06 PM IST (Updated: 18 Nov 2019 6:06 PM IST)
t-max-icont-min-icon

அதிசயம், அதிர்ஷ்டத்தை ரஜினி நம்பலாம். ஆனால் நாங்கள் மக்களை, வாக்காளர்களை மட்டுமே நம்புகிறோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

புதிய தலைமை தகவல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, அமைச்சர் ஜெயக்குமார் இன்று சந்தித்தார். 

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வர் பழனிசாமி தலைமையில், தலைமை தகவல் ஆணையரை நியமிப்பது குறித்து ஆலோசனை நடந்தது. இது தொடர்பான பரிந்துரை கடிதத்தை கவர்னரிடம் கொடுத்துள்ளேன். 

அதிசயம், அற்புதம், அதிர்ஷ்டம் நிகழும் என ரஜினி சொன்னது, அதிமுகவுக்கு தான். மீண்டும் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம். 2021ல் அதிமுக ஆட்சி அமைப்பதையே அதிசயம் என்று ரஜினி கூறி இருக்கலாம். 

அதிசயம், அதிர்ஷ்டத்தை ரஜினி நம்பலாம், ஆனால் நாங்கள் மக்களை, வாக்காளர்களை  மட்டுமே நம்புகிறோம். அதிமுகவை விமர்சித்து பெரிய ஆள் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக மறைந்து விடும் என்றார்கள். ஆனால் ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என கூறினார்.

Next Story