தேசிய செய்திகள்

ஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயருகிறது + "||" + Reliance Jio charges rise following Airtel and Vodafone

ஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயருகிறது

ஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயருகிறது
ஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயர உள்ளது.
புதுடெல்லி,

நஷ்டத்தில் இயங்கி வருவதாக சொல்லப்படுகிற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை செல்போன் சேவை கட்டணங்களை (அழைப்பு கட்டணம் மற்றும் இணையதள கட்டணம்) உயர்த்துவதாக அறிவித்துள்ளன.


அந்த வரிசையில் இப்போது ரிலையன்ஸ் ஜியோவும் சேருகிறது.

இதையொட்டி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மற்ற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களைப் போல தங்கள் நிறுவனமும் கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி உள்ளது.

அடுத்த சில வாரங்களில் இந்த கட்டண உயர்வு இருக்கும்.

இது குறித்து தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயுடன் ரிலையன்ஸ் ஜியோ ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு இணையதள பயன்பாட்டையும், டிஜிட்டல்மய வளர்ச்சியையும் பாதிக்காத வகையிலும், முதலீடுகளை நிலைநிறுத்துகிற வகையிலும் அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது.



தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக் செயலியின் பயன்பாடுக்கு தடை
ஹாங்காங்கில் டிக்டாக் செயலியின் பயன்பாடு மற்றும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...