அஜித் பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல- சரத்பவார்


அஜித் பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல- சரத்பவார்
x
தினத்தந்தி 23 Nov 2019 5:14 AM GMT (Updated: 23 Nov 2019 5:14 AM GMT)

அஜித் பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.

மும்பை

மராட்டிய அரசியலில் திடீர் திருப்பமாக    முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரியாக அஜித் பவார் இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர்.  அவர்களுக்கு  ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதுகுறித்து மூத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறும் போது,  அஜித் பவாரும் அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் மராட்டியத்தை  அவமதித்துள்ளனர் என கூறினார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறும் போது,

மராட்டியத்தில்  அரசை உருவாக்க பாஜகவை ஆதரிக்க அஜித்பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல. அவருடைய இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை என கூறினார்.

Next Story