ஜாமீன் கிடைத்ததையடுத்து திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்
106 நாள்கள் சிறைவாசத்துக்கு பின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஜாமீனில் வெளிவந்தார்.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. தனிக்கோர்ட்டு நீதிபதி முன்பு ரூ.2 லட்சம் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனும் வழங்கி அவர் ஜாமீனில் விடுதலை ஆகலாம் என்றும் ப.சிதம்பரம் தனிக்கோர்ட்டின் அனுமதி இன்றி வெளிநாடு செல்லக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, ப.சிதம்பரம் 106 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து, வெளிவந்தார். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
Related Tags :
Next Story