தேசிய செய்திகள்

வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் : ஏர்டெல் - வோடபோன் ஐடியா + "||" + Airtel, Vodafone Idea remove cap on free outgoing calls to other networks

வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் : ஏர்டெல் - வோடபோன் ஐடியா

வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் : ஏர்டெல் - வோடபோன் ஐடியா
வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் என ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
புதுடெல்லி,

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய பயன்பாட்டுக்கான பேக்கேஜ் கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின. வேறு நெட்வொர்க்கிற்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் நிமிடங்கள் வரைதான் பேச முடியும் என அறிவிக்கப்பட்டது.

 தொடர் நஷ்டம் காரணமாக ஜியோ, வேறு நெட்வொர்க் போன் கால்களுக்கு பணம் வசூலிக்க தொடங்கி உள்ளது. அதாவது ஜியோவில் இருந்து வேறு நெட்வொர்க் போனுக்கு கால் செய்தால் நாம் பழையபடி கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான திட்டங்களை ஜியோ கடந்த மாதம் அறிவித்தது.

கடந்த 3-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.  ஆனால் திடீர் திருப்பமாக, தற்போது ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து வேறு நெட்வொர்க் நிறுவனத்திற்கு செல்லும் போன் காலுக்கான கட்டணத்தை ரத்து செய்துள்ளது. முன்பு ஜியோ செய்ததை தற்போது இவர்கள் செய்கிறார்கள். அதாவது இனி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு கால் செய்தால் கட்டணம் இல்லை.

இதற்காக நான்கு புதிய பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளது. முன்னதாக 28 நாள் பிளான் ரீசார்ஜ் செய்தால் 1000 நிமிடங்கள், 84 நாள் பிளான் ரீசார்ஜ் செய்தால் 3000 நிமிடங்கள், 365 நாள் பிளான் ரீசாஜ் செய்தால் 12 ஆயிரம் நிமிடங்களை வேறு நெட்வொர்க்கிற்கு இலவசமாக பேச முடியும். 

இதனிடையே, ஆல் இன் ஒன் பிளான் மூலம் பிற நிறுவனங்களை விட ஐந்து மடங்கு அதிகமாக இலவச அழைப்புகளை வழங்கி வருவதாக ஜியோ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஏர்டெல், வோடபோன், ஜியோ தனியார் செல்போன் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்தது
ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் துறை செல்போன் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஜியோவின் கட்டண உயர்வு 6-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
2. ஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயருகிறது
ஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயர உள்ளது.