தேசிய செய்திகள்

கண்டுகொள்ளாத கள்ளக்காதலி; 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன் + "||" + Kerala woman stabbed to death in broad daylight in Kollam ...

கண்டுகொள்ளாத கள்ளக்காதலி; 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்

கண்டுகொள்ளாத கள்ளக்காதலி; 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்
கண்டுகொள்ளாத கள்ளக்காதலியை காதலன் 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
கண்ணூர்

கேரள மாநிலம்  கண்ணூரில் உள்ள குந்தரா போலீஸ் சரகம் அஞ்சுகுன்னுவை சேர்ந்தவர் ஷாஜிலா( வயது 40) . இவர் கடந்த புதன்கிழமை தனது இளைய மகளை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஷாஜிலாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனிஷ் குட்டி( வயது 32) என்பவர்  பைக்கில் ஷாஜிலாவை  வழியில் மறித்து தகராறு செய்து உள்ளார்.
பின்னர் அனிஷ்குட்டி ஷாஜிலாவை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால்  சரமாரியாக குத்தினார். இதில் ஷாஜிலா மார்பு, கைகள், கால்கள், வயிறு மற்றும் கழுத்து ஆகியவற்றில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே  விழுந்து பலியானார்.

விரைந்து வந்த போலீசார் அனிஷ்குட்டியை கைது செய்தனர்.  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஷாஜிலாவுக்கும்,  அனிஷ் குட்டிக்கும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.  இந்த நிலையில் ஷாஜிலா சில நாட்களாக அனிஷ் குட்டியை கண்டுகொள்வது இல்லை. இதனால் கோபம் அடைந்த அனிஷ் குட்டி ஷாஜிலாவை கத்தியால் குத்திக் கொலை செய்து உள்ளார்.

ஷாஜிலாவுக்கு மார்பு, கைகள், கால்கள், வயிறு மற்றும் கழுத்து  என பல இடங்களில் 31 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இவ்வாறு போலீசார் கூறினர். 

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.25 க்கு சாப்பாடு;1,000 குடும்பஸ்ரீ ஓட்டல்கள் கேரள பட்ஜெட்டில் அறிவிப்பு
கேரளா முழுவதும் மானிய விலையில் 25 ரூபாய்க்கு கேரள உணவுகளை விற்க 1,000 குடும்பஸ்ரீ ஓட்டல்கள் அமைக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
2. 6 குழந்தைகள் - 16 பேரக்குழந்தைகள்: கல்வி கற்பதில் ஆர்வம் காட்டும் 105 வயது பாட்டி
கேரளாவைச் சேர்ந்த 105 வயதான பாட்டி, மாநிலத்தின் மிக வயதான கல்வி கற்கும் பெண்மணியாக மாறி உள்ளார்.
3. மாற்றுத்திறனாளி வாலிபரின் காலை பிடித்து வரவேற்ற கேரள முதல்-மந்திரி: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்
தன்னை நேரில் சந்தித்த கையில்லாத மாற்றுத்திறனாளி இளைஞரின் கால் விரல்களை பிடித்து, குலுக்கி வரவேற்ற முதல்-மந்திரி பினராயி விஜயனின் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
4. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு
மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.