தேசிய செய்திகள்

பொதுமக்களே வன்முறையில் தயவு செய்து ஈடுபடாதீர்கள்; மம்தா பானர்ஜி வேண்டுகோள் + "||" + WB CM Mamata Banerjee: I request everyone to not create any disturbance or involve in any kind of violence

பொதுமக்களே வன்முறையில் தயவு செய்து ஈடுபடாதீர்கள்; மம்தா பானர்ஜி வேண்டுகோள்

பொதுமக்களே வன்முறையில் தயவு செய்து ஈடுபடாதீர்கள்; மம்தா பானர்ஜி வேண்டுகோள்
தயவு செய்து வன்முறையில் ஈடுபடாதீர்கள் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பொதுமக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.
கொல்கத்தா,

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகும் முஸ்லிம் அல்லாத பிற மதத்தினரான இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர்,  ஜெயின் சமூகத்தினர், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு இந்தியக்குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமைச்சட்டம் 1955ல் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.  இதனை அடுத்து கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர், மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்தது. கடும் எதிர்ப்புகளை மீறி அந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை சட்டம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடைபெறும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்காளத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் மூர்ஷிதாபாத் மாவட்டங்கள் மற்றும் ஹவுரா கிராம பகுதியிலும் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.

கிழக்கு ரெயில்வேக்கு உட்பட்ட சீல்டா மற்றும் ஹஸ்னாபாத் பிரிவுக்கு இடையே ரெயில் சேவை முடங்கியது.

இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, குடியுரிமை திருத்த சட்டம் 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தப்படாது என்பது உறுதி.  அவற்றை நாங்கள் அனுமதிக்க போவதில்லை.

அதனால் மக்களே தயவு செய்து நீங்கள் சாலை மறியலில் ஈடுபடாதீர்கள்.  சட்டத்தினை கைகளில் எடுத்து கொள்ளாதீர்கள்.

யாரும் இடையூறுகள் எதனையும் உருவாக்கவோ அல்லது எந்த வகையிலான வன்முறையில் ஈடுபடுவதோ வேண்டாமென ஒவ்வொருவரையும் நான் வேண்டி கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாலம் கட்டாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
பாலம் கட்டாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
2. அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
கறம்பக்குடி அருகே வகுப்புகளை புறக்கணித்து அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
ஜோலார்பேட்டை அருகே சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் அரசு பஸ்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. தஞ்சையில், பெண்கள் சாலை மறியல்; 131 பேர் கைது
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க கோரி தஞ்சையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 131 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. விவசாயி மர்ம சாவு ; உறவினர்கள் சாலை மறியல்
தர்மபுரி அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-