உத்தரபிரதேசம்; குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை


உத்தரபிரதேசம்; குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
x
தினத்தந்தி 19 Dec 2019 1:23 PM GMT (Updated: 19 Dec 2019 1:23 PM GMT)

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

லக்னோ,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. சில இடங்களில் வன்முறையாக மாறி, பொதுச்சொத்துகள் சேதமடைகின்றன. 

வன்முறையை தடுக்கும் போலீசார் பலர் காயமடைந்துள்ளனர். ஆனாலும், நாளுக்கு நாள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மாணவர்கள் மற்றும் மக்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு போலீசார் முயற்சித்தாலும், சில மாநிலங்களில் அரசே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேசம் லக்னோவில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. லக்னோவில் உள்ள பரிவர்தன் சவுக் பகுதியில் ஏராளமானோர் திரண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.  சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.  20 மோட்டார் சைக்கிள்கள், 10 கார்கள், 3 பேருந்துகள், 4 ஊடக ஓபி வேன்கள் தீக்கிரையாகின.  போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்ததோடு, தடியடி நடத்தினர்.

Next Story