கோடிக்கணக்கான மக்களை குழப்பிய ஊஞ்சல் ஆடும் நபரின் வீடியோ


கோடிக்கணக்கான மக்களை குழப்பிய ஊஞ்சல் ஆடும் நபரின் வீடியோ
x
தினத்தந்தி 24 Dec 2019 11:38 AM GMT (Updated: 24 Dec 2019 11:38 AM GMT)

ஊஞ்சலில் ஆடும் நபரின் வீடியோ டுவிட்டரில் விவாத பொருளாகி 1.8 கோடி முறை கண்டு களிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சமூக ஊடகங்கள் மக்களை ஆக்கிரமித்து கொண்ட பின்பு பல்வேறு சுவாரசிய தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதில் பகிரப்பட்டு வருகின்றன.  இதனை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்து விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதுபோன்று சமீபத்தில் ஒரு வீடியோ வெளிவந்து கோடிக்கணக்கானோரை விவாதத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

sdw














இந்த வீடியோவில், பனி நிறைந்த பகுதியில் கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது.  அதன் அருகே ஊஞ்சல் ஒன்றில் அமர்ந்து ஒரு நபர் ஆடுகிறார்.  அவர் கேமிராவை நோக்கி ஊஞ்சல் ஆடுகிறாரா? அல்லது கட்டிடத்தின் முகப்பு பகுதியை நோக்கி ஊஞ்சல் ஆடுகிறாரா? என்பது விவாத பொருளாகியுள்ளது.

கடந்த 21ந்தேதி டிக் டாக்கில் இந்த வீடியோ வெளியானது.  இதன்பின்னர் டுவிட்டரில் பகிரப்பட்டது.  இது 1.8 கோடி முறை கண்டு களிக்கப்பட்டு உள்ளது.

அவர்களில் அனா என்ற ஒரு டுவிட்டர்வாசி, வீடியோவை பகிர்ந்து விட்டு, ஊஞ்சல் ஆடுபவர் எந்த பகுதியை நோக்கி இருக்கிறார் என யாரேனும் கூற முடியுமா? என்று பதிவிட்டு உள்ளார்.  இந்த வீடியோ 1.5 கோடி முறை காணப்பட்டு உள்ளது.

இதேபோன்று, 234 டேஸ் (நாட்கள்) என்ற பெயரில் ஒருவர் வீடியோவை பகிர்ந்து, அவர் கட்டிட முகப்பு பகுதியை நோக்கி ஊஞ்சல் ஆடுகிறார் என எனக்கு தெரிகிறது.  உங்களுக்கு என்ன தெரிகிறது? என கேட்டுள்ளார்.  இந்த வீடியோ 32 லட்சம் முறை காணப்பட்டு உள்ளது.

இதனால் மக்கள் இரு பிரிவுகளாக இருந்து கொண்டு விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஊஞ்சல் ஆடுபவர் கேமிராவை நோக்கி உள்ளார் என ஒரு பிரிவினரும், கட்டிட முகப்பு பகுதியை நோக்கி உள்ளார் என மற்றொரு பிரிவினரும் டுவிட்டரில் தெரிவித்து உள்ளனர்.

இதில் பலர் வரைபடங்களை வரைந்து தங்களது வாதத்திற்கு வலு சேர்த்தும் வருகின்றனர்.  எனினும், கோடிக்கணக்கானோரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்த வீடியோவை பற்றிய விவாதம் முடிவின்றி சென்று கொண்டு இருக்கிறது.

Next Story