இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மறந்து விடக்கூடாது - மாயாவதி


இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மறந்து விடக்கூடாது - மாயாவதி
x
தினத்தந்தி 1 Jan 2020 9:54 PM IST (Updated: 1 Jan 2020 9:54 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மறந்து விடக்கூடாது என மாயாவதி கூறியுள்ளார்.

லக்னோ,

அரசியல் சாசனத்தை பா.ஜனதா பலவீனப்படுத்தி விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித்தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதி குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கடந்த ஆண்டைப்போல இந்த புதிய ஆண்டு வலி நிறைந்ததாக இருக்கக்கூடாது. மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பா.ஜனதா அரசுகளின் மதவாத மற்றும் குறுகிய மனப்பான்மை அணுகுமுறைகளால் 2019–ம் ஆண்டில் அரசியல் சாசனம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு, வன்முறை சம்பவங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. இது மிகவும் கவலையளிப்பதும், துரதிர்ஷ்டவசமானதும் ஆகும்.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மறந்து விடக்கூடாது என்று கூறியுள்ள மாயாவதி, மதங்களின் கலாசாரங்களை நாம் மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். அதேநேரம் அரசுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை கூடாது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story