நாங்கள் எந்த பணியும் செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால், எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் -அரவிந்த் கெஜ்ரிவால்


நாங்கள் எந்த பணியும் செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால், எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் -அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 7 Jan 2020 5:49 AM GMT (Updated: 7 Jan 2020 7:45 AM GMT)

கல்வி, மின்சாரம், நீர், மேம்பாட்டுப் பணிகளில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

புதுடெல்லி

70 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி  கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 8-ந்தேதி டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வி, மின்சாரம், சாலைகள், நீர் வழங்கல் மற்றும் கட்டுமானப் பணிகளை மேம்படுத்துவதில் எங்கள் கட்சி மேற்கொண்ட பணிகளை டெல்லி மக்கள் கவனிக்க வேண்டும். நாங்கள் எந்த பணிகளையும் செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால், எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

டெல்லி காவல்துறை, மாநகராட்சி மற்றும் டி.டி.ஏவை பாஜக கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் எங்கள் கட்சி கல்வி, மின்சாரம், சாலைகள், நீர் வழங்கல் மற்றும் கட்டுமான பணிகளை கட்டுப்படுத்துகிறது.

எந்தக் கட்சி சிறந்த பணிகளை மேற்கொண்டு உள்ளது என்பதை டெல்லி மக்கள் இப்போது முடிவு செய்வார்கள். நாங்கள் எந்த பணியும் செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால், எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம். நாங்கள் அபிவிருத்திக்காக மட்டுமே பணியாற்ற விரும்புகிறோம், வேறு ஒன்றும் இல்லை என கூறினார்.

Next Story