நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும்


நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும்
x
தினத்தந்தி 8 Jan 2020 11:51 AM IST (Updated: 8 Jan 2020 11:51 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய புள்ளியியல் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2018-19  நிதியாண்டில் 6.9 சதவீதமாக காணப்பட்ட தயாரிப்பு துறையின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும். தற்போது, வேளாண், கட்டுமான துறை, மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம் போன்ற துறைகளின் வளர்ச்சியிலும் சரிவு காணப்படுகிறது. அதேசமயம், சுரங்கம், பொது நிர்வாகம், பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளில் சிறிய வளர்ச்சி தென்படுவதாகவும் அந்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story