ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து


ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து
x
தினத்தந்தி 13 Jan 2020 1:19 AM IST (Updated: 13 Jan 2020 1:19 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பொங்கல் பண்டிகையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொங்கல் பண்டிகை நாட்டின் புவியியல், கலாசாரம் மற்றும் உணர்ச்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட விலைமதிப்பற்ற பங்களிப்பை கொண்டுள்ளது. இந்த விழா அமைதியான சுகவாழ்வு, ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தவும், தேசத்தின் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், மகர சங்கராந்தி விழாவுக்கும் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story