இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு


இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 17 Jan 2020 3:45 PM GMT (Updated: 17 Jan 2020 3:45 PM GMT)

ஜி சாட் - 30 செயற்கைக்கோளை வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தகவல் தொடர்பு சேவைக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி ஏரியான்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.  

இந்நிலையில்,  ஜி சாட் - 30 செயற்கைக்கோளை வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

2020-ம் ஆண்டின் முதல் செயற்கோளை விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். டிடிஎச் சேவை, ஏடிஎம் இணைப்பு, மின் ஆளுமை போன்றவற்றை வழங்க ஜிசாட்-30 உதவும். இஸ்ரோ மேலும் பல திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்ளவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Next Story