ராஜஸ்தானில் ஊராட்சி தலைவரான 97 வயது மூதாட்டி


ராஜஸ்தானில் ஊராட்சி தலைவரான 97 வயது மூதாட்டி
x
தினத்தந்தி 17 Jan 2020 9:10 PM GMT (Updated: 17 Jan 2020 9:10 PM GMT)

ராஜஸ்தானில் 97 வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி தலைவராகி உள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் நடந்த ஊராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிகார் மாவட்டத்துக்கு உட்பட்ட புராணவாஸ் ஊராட்சிக்கு நடந்த தலைவர் தேர்தலில் வித்யா தேவி என்ற 97 வயது மூதாட்டி வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 843 வாக்குகளை பெற்ற வித்யா தேவி, தனக்கு அடுத்ததாக வந்த மீனாவை 207 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு வித்யா தேவியுடன் சேர்த்து 11 பேர் போட்டியிட்டனர். இதில் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது அந்த கிராமத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வித்யா தேவியின் கணவரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊராட்சியின் தலைவராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story