பெண்கள் பாதுகாப்புக்கு தனிப்படை: ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி


பெண்கள் பாதுகாப்புக்கு தனிப்படை: ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி
x
தினத்தந்தி 19 Jan 2020 8:40 PM GMT (Updated: 19 Jan 2020 8:40 PM GMT)

பெண்கள் பாதுகாப்புக்கு தனிப்படை அமைக்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்காக ஆளும் ஆம் ஆத்மி கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. ‘கெஜ்ரிவாலின் 10 உத்தரவாதங்கள்’ என பெயரிடப்பட்ட இந்த உத்தரவாத அட்டையை முதல்-மந்திரி கெஜ்ரிவால் வெளியிட்டார்.

இதில் மாநிலத்தில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து, பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு பாதுகாவலர்கள், 200 யூனிட் வரை இலவச மின்சாரம், இலவச சுகாதார வசதி, 2 கோடி மரக்கன்று நடுதல், யமுனை நதி தூய்மை, மாசுபாடு குறைத்தல், 11 ஆயிரம் புதிய பஸ்கள், மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிப்பு போன்ற திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால், “டெல்லி மக்களுக்கு நான் 10 உத்தரவாதங்கள் தருகிறேன். இது தேர்தல் அறிக்கை அல்ல. விரிவான தேர்தல் அறிக்கையை 7 முதல் 10 நாட்களுக்குள் நாங்கள் வெளியிடுவோம். அதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிறைய திட்டங்கள் இருக்கும். இது ஒவ்வொருவருக்குமானது” என்று கூறினார்.


Next Story