தேசிய செய்திகள்

மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு வீடியோ: சிவசேனா கண்டனம் + "||" + Video Comparing Modi To Chhatrapati Shivaji: Shiv Sena condemned

மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு வீடியோ: சிவசேனா கண்டனம்

மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு வீடியோ: சிவசேனா கண்டனம்
மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்டதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பை,

சத்ரபதி சிவாஜியின் தளபதி பற்றி ‘தானாஜி’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மாற்றி அமைக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

பா.ஜனதா ஆதரவு இணையதள பக்கம் என கூறப்படும் ‘பொலிட்டிகள் கிடாவில்’ அந்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜியாகவும், அமித்ஷா சத்ரபதி சிவாஜியின் போர் படை தளபதியான தானாஜியாகவும், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எதிராளியான உதய்பான் சிங் ரதோராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.


டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை கேலி செய்யும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “சத்ரபதி சிவாஜியின் பெயரை தவறாக பயன்படுத்துவது சரியானது அல்ல. அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. “குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக அமையும்” - நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு மோடி வரவேற்பு
கொரோனா வைரசால் பாதித்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளை பிரதமர் மோடி வரவேற்றார். இது குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
2. மோடியிடம் உதவி கேட்ட டிரம்ப் - ‘கொரோனா சிகிச்சைக்கான மருந்தை அமெரிக்காவுக்கு வழங்குங்கள்’
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யுமாறு பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டுக் கொண்டார்.
3. மோடி பகிர்ந்த யோகா வீடியோவுக்கு இவான்கா டிரம்ப் பாராட்டு “அற்புதமானது”
பிரதமர் மோடி பகிர்ந்து கொண்ட யோகா வீடியோ அற்புதமானது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளான இவான்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.
4. ‘மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும்’ - கோலி வேண்டுகோள்
மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. மோடியும் அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் இல்லை ; சிவசேனா
‘மோடியும், அமித்‌ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல’ என சிவசேனா தெரிவித்து உள்ளது.