டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் விதிமுறைகள் மீறல் என 236 பேர் மீது வழக்குகள் பதிவு


டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் விதிமுறைகள் மீறல் என 236 பேர் மீது வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 22 Jan 2020 12:25 PM GMT (Updated: 22 Jan 2020 12:25 PM GMT)

டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் மீறல் என 236 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,  தேர்தல் விதிமுறைகள் மீறல் என 236 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றில் ஆயுத தடை  சட்டத்தின் கீழ் 210 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 109 கிலோ எடையுடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.  மேலும் அனுமதியின்றி வைக்கப்பட்ட 5 லட்சத்து 43 ஆயிரத்து 512 பேனர்கள் அகற்றபட்டுள்ளதாகவும், கலால் வரி சட்டத்தின் கீழ் 562 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, 567 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story