ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு- உபி அரசு


ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு- உபி அரசு
x
தினத்தந்தி 25 Jan 2020 6:43 AM GMT (Updated: 25 Jan 2020 6:43 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்-வீராங்கனையருக்கு தலா 6 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று உபி அரசு அறிவித்துள்ளது.

லக்னோ

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கம் வெல்லும் உத்தரப்பிரதேச மாநில வீரர்-வீராங்கனைகளுக்கு தலா 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வெல்வோருக்கு தலா 4 கோடி ரூபாயும், வெண்கலம் வெல்வோருக்கு தலா 2 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.

இதேபோல், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் எனவும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

Next Story