கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான நிர்பயா கொலை குற்றவாளியின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான நிர்பயா கொலை குற்றவாளியின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 27 Jan 2020 11:15 PM GMT (Updated: 27 Jan 2020 10:41 PM GMT)

கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான நிர்பயா கொலை குற்றவாளியின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா(25), அக்‌ஷய் குமார் (31), வினய் குமார் சர்மா ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை வருகிற பிப்ரவரி 1-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், தனது கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார்.

முகேஷ் குமார் சிங்கின் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.


Next Story