பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு தயார், முதலில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறுங்கள் - மம்தா பானர்ஜி


பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு தயார், முதலில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறுங்கள் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 28 Jan 2020 7:15 PM GMT (Updated: 28 Jan 2020 7:15 PM GMT)

பிரதமருடன் மோடியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், முதலில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறுங்கள் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. கடந்த வருட இறுதியில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும், ஆனால் அதற்கு முதலில்  குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேச்சுவார்த்தைக்கு பிரதமர் நரேந்திர மோடி தயாராக இருப்பது மிக நல்ல விஷயம்தான். பேச்சுவார்த்தைக்கு எதிர்க்கட்சிகளும் தயாராகவே உள்ளன . ஆனால் பேச்சுவார்த்தை துவங்கும் முன்னால் பிரதமர் நரேந்திரமோடி சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை முதலில் கைவிட வேண்டும்.

மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கூட்டத்தில் விவாதித்து குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வரவில்லை. அதேபோல எல்லா அரசியல் கட்சிகளையும் அழைத்து காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. குடியுரிமை திருத்த சட்ட விஷயத்தில் மத்திய அரசை எதிர்த்து எல்லா எதிர்க்கட்சிகளும் போராடிக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் எல்லாம் தேசவிரோத சக்திகள் என்று கூறிவிட முடியாது என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.


Next Story