இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நியமனம்


இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நியமனம்
x
தினத்தந்தி 29 Jan 2020 6:07 AM GMT (Updated: 29 Jan 2020 6:07 AM GMT)

இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் 32-வது வெளியுறவுத் துறை செயலாளராக விஜய் கேசவ் கோகலேவின் பணிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 33-வது வெளியுறவுத் துறை செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பதவி ஏற்றுள்ளார். இதற்கு முன்னதாக இவர், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக செயல்பட்டு வந்தார்.

பதவியேற்ற பின் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா செய்தியாளர்களிடம் பேசியபோது, “36 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞராக இந்த தளத்திற்குள் நான்  நுழைந்தபோது இருந்ததை போல, இப்பொழுதும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அமைச்சகத்திற்கு உள்ள பங்கில்  நான் கடமைப்பட்டுள்ளேன். பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்ற நான் ஆவலாக இருக்கிறேன்” என்று கூறினார்.

Next Story