சிறுவன் தலையில் பாய்ந்த 4 அங்குல அம்பு அறுவை சிகிச்சைக்கு பின் நீக்கம்


சிறுவன் தலையில் பாய்ந்த 4 அங்குல அம்பு அறுவை சிகிச்சைக்கு பின் நீக்கம்
x
தினத்தந்தி 4 Feb 2020 11:29 AM GMT (Updated: 4 Feb 2020 11:29 AM GMT)

மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுவனின் தலையில் 4 அங்குல அளவிற்கு பாய்ந்திருந்த அம்பு அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டது.

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதியில் 3 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான்.  அவன் மீது அடையாளம் தெரியாத ஒருவன் மிக நெருங்கிய நிலையில் இருந்து அம்பு ஒன்றை எய்துள்ளான்.

இது அவனது தலையில் 4 அங்குல ஆழத்தில் பாய்ந்தது.  இதன்பின்பு அலிராஜ்பூர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அதனை நீக்க முயன்றுள்ளனர்.  ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.

இதில், அம்பின் மூங்கில் பகுதி உடைந்தது.  ஆனால், அம்பின் இரும்பு பகுதி சிறுவனின் தலையின் உள்ளேயே இருந்தது.  இதன்பின் மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனைக்கு (எம்.ஒய்.எச்.) சிறுவன் கொண்டு செல்லப்பட்டான்.

8 பேர் கொண்ட மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிறுவனின் தலையில் இருந்து அம்பினை நீக்கியது.  இதன்பின் சிறுவன் நலமுடன் உள்ளான்.  இதுபற்றி கூறிய போலீசார், பழங்குடியின மக்கள் வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்படும்பொழுது அம்புகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர்.

இதனை அடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அம்பு நீக்கப்படுகிறது என கூறியுள்ளனர்.

Next Story