ராமர் கோவில் கட்ட அமைக்கப்பட்ட அறக்கட்டளையில் ஒரு தலித் உறுப்பினர் உட்பட 15 உறுப்பினர்கள்- அமித்ஷா


ராமர் கோவில் கட்ட அமைக்கப்பட்ட அறக்கட்டளையில் ஒரு தலித் உறுப்பினர் உட்பட 15 உறுப்பினர்கள்- அமித்ஷா
x
தினத்தந்தி 5 Feb 2020 7:13 AM GMT (Updated: 5 Feb 2020 7:13 AM GMT)

ராமர் கோவில் கட்ட அமைக்கப்பட்ட அறக்கட்டளையில் ஒரு தலித் உறுப்பினர் உட்பட 15 உறுப்பினர்கள் இருப்பார்கள் என அமித்ஷா கூறி உள்ளார்.

புதுடெல்லி

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மக்களவையில் இன்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி  அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த சேத்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது.  அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சுதந்திரமாக செயல்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம். அயோத்தியில் விரைவில் ராமல் கோவில் கட்டும் பணி தொடங்கும் என கூறினார்.

இதை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது 

ராமர் கோவில் கட்ட அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையில் ஒரு தலித் உறுப்பினர் உட்பட 15 உறுப்பினர்கள் இருப்பார்கள். சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் இதுபோன்ற முன்னோடியில்லாத முடிவுக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என கூறினார்.

Next Story