சீனாவிற்கான இ-விசாக்கள் இனி செல்லுபடியாகது - இந்திய வெளியுறவுத்துறை


சீனாவிற்கான இ-விசாக்கள் இனி செல்லுபடியாகது - இந்திய வெளியுறவுத்துறை
x
தினத்தந்தி 6 Feb 2020 11:55 AM GMT (Updated: 6 Feb 2020 11:55 AM GMT)

சீனாவிற்கான இ-விசாக்கள் இனி செல்லுபடியாகது என இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;-

வியட்நாமின் துணை அதிபர் வரும் பிப்ரவரி 11 முதல் 13 வரை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வியட்நாம் துணை அதிபர் இந்திய பயணத்தின் போது, இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நேரடி விமானத்தை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல போர்ச்சுகல் ஜனாதிபதி  மார்செலோ ரெபெலோ வரும் 13 முதல் 16 வரை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது அவரது முதல் இந்திய பயணமாகும்.

 2 விமானங்களில் 640 இந்திய மக்களையும் 7 மாலத்தீவு மக்களையும் சீனாவில் இருந்து வெளியேற்றுவதை வெற்றிகரமாக மேற்கொண்டோம்.  இது ஒரு சிக்கலான நடவடிக்கையாகும், இந்த பயிற்சியின் போது சீன அரசு அளித்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

சீனாவிற்கான இ-விசாக்களும் இனி செல்லுபடியாகாது.  இதேபோல், வழங்கப்பட்ட சாதாரண விசாக்களும் இனி செல்லுபடியாகாது. 

இந்தியாவுக்கு வருவதற்கு கட்டாய காரணங்கள் உள்ளவர்கள், அவர்கள் எங்கள் தூதரகத்தையோ அல்லது அருகிலுள்ள தூதரகத்தையோ தொடர்பு கொண்டு விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story