15 நாட்களுக்கு ‘பாஸ்டேக்’ வில்லைகளை கட்டணமின்றி பெறலாம் மத்திய அரசு அறிவிப்பு


15 நாட்களுக்கு   ‘பாஸ்டேக்’ வில்லைகளை கட்டணமின்றி பெறலாம்   மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2020 10:43 PM GMT (Updated: 12 Feb 2020 10:43 PM GMT)

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வினியோகிக்கும் பாஸ்டேக் வில்லைகளை 15 நாட்களுக்கு கட்டணமின்றி பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் 527 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ என்ற மின்னணு முறையிலான கட்டண வசூல் அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களில் பொருத்தப்படும் பாஸ்டேக் வில்லைகள், 100 ரூபாய் கட்டணத்தில் வங்கிகள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சார்பில் வினியோகிக்கப்படுகின்றன.

இந்நிலையில், மின்னணு கட்டண வசூலை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வினியோகிக்கும் பாஸ்டேக் வில்லைகளை ரூ.100 கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை, இவற்றை இலவசமாக பெறலாம் என்று மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரபூர்வ விற்பனையகங்களில், வாகனங்களின் முறையான ஆர்.சி. புத்தகத்தை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்டேக் கணக்கின் டெபாசிட் தொகை, குறைந்தபட்ச இருப்பு ஆகியவற்றில் மாற்றம் இல்லை.

Next Story