இலங்கையுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்


இலங்கையுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்   மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 12 Feb 2020 11:20 PM GMT (Updated: 12 Feb 2020 11:20 PM GMT)

இந்தியா-இலங்கை இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதுடெல்லி, 

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தியா-இலங்கை இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரிஏய்ப்பை தடுக்கும் நோக்கத்தில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

3 பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி மூலதனமாக வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளில், சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோர் உரிய வரியை செலுத்தி, வட்டி தள்ளுபடி மற்றும் அபராத தள்ளுபடி சலுகையை பெறும் திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கடன் வசூல் தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளுக்கும் பொருந்தும் வகையில் இந்த திருத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவல்களை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Next Story