தேசிய செய்திகள்

டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை + "||" + 2 killed in encounter with police in Delhi

டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புதுடெல்லி,


டெல்லியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு போலீசார் பிஹ்லட் புர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 

 இன்று அதிகாலை 5.30 மணியளவில்,  இருவர் சந்தேகத்திற்கிடமாக இருவர் அவ்வழியாக சென்றனர். இதைக் கவனித்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.  ஆனால்,  இருவரும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றனர். இதையடுத்து, போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். 

இந்த மோதலில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரும் கொல்லப்பட்டனர்.  என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்று, 5 ரெயில்களில் ஊர் திரும்பியவர்களை கண்டறியும் பணி தீவிரம்
டெல்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்று, 5 ரெயில்களில் ஊர் திரும்பியவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
2. டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு; அரசு மருத்துவமனை மூடப்பட்டது
டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4. டெல்லியில் டாக்டருக்கு கொரோனா பாதிப்பு: சிகிச்சை பெற்ற நோயாளிகளை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்
டெல்லியில் டாக்டருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
5. டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளிகள் 4 பேரும் தூக்கில் போடப்பட்டனர்
டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் தூக்கில் போடப்பட்டனர். அவர்களுடைய உடல் கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.