தேசிய செய்திகள்

டெல்லியில் 6 மாடி கட்டிடம் சாய்ந்தது - குடியிருப்புவாசிகள் அலறியடித்து வெளியேறினர் + "||" + 6-Storey Building Tilts, Residents Evacuated In Delhi

டெல்லியில் 6 மாடி கட்டிடம் சாய்ந்தது - குடியிருப்புவாசிகள் அலறியடித்து வெளியேறினர்

டெல்லியில் 6 மாடி கட்டிடம் சாய்ந்தது - குடியிருப்புவாசிகள் அலறியடித்து வெளியேறினர்
டெல்லியில் 6 மாடி கட்டிடம் லேசாக சாய்ந்தது இதனால் குடியிருப்புவாசிகள் அலறியடித்து வெளியேறினார்கள்.
புதுடெல்லி, 

தெற்கு டெல்லியின் முனிர்கா பகுதியில் ஒரு 6 மாடி கட்டிடம் உள்ளது. இதில் உள்ள 45 குடியிருப்புகளில் சுமார் 100 பேர் வசித்து வருகிறார்கள். இந்த கட்டிடம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வடக்கு வாசல் முன்புறம் அமைந்துள்ளது. 

நேற்று காலை 5.30 மணி அளவில் அந்த கட்டிடம் லேசாக சாய்ந்தது. இதனை அந்த வழியாக சென்ற போலீஸ்காரர் பார்த்துவிட்டு எச்சரித்தார். இதனால் அந்த கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் இடையே பீதி ஏற்பட்டது. அங்கு குடியிருந்த அனைவரும் அலறியடித்து அந்த கட்டிடத்தைவிட்டு வெளியேறினார்கள். 

மாநகராட்சி அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து
டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து செய்யப்படுவதாக இந்திய தேசிய ரைபிள் சம்மேளனம் நேற்று அறிவித்தது.
2. டெல்லியில் இருந்து வந்த இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு
டெல்லியில் இருந்து வந்த இந்தோனேசியாவை சேர்ந்த 8 பேர் உள்பட 11 பேர் மீது ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. டெல்லி சென்று திரும்பிய 7 பேருக்கு கொரோனா இல்லை
டெல்லி சென்று திரும்பிய 7 பேருக்கு நடந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏதுமில்லை என உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
4. டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதித்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில், கொரோனா வைரஸ் பாதித்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் அறிவித்தனர்.
5. டெல்லி சென்று திரும்பிய 15 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களில் 15 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...