மணமகனின் செயலால் மணமேடையிலேயே மாலையை உதறி விட்டு எழுந்த மணமகள்


மணமகனின் செயலால் மணமேடையிலேயே மாலையை உதறி விட்டு எழுந்த மணமகள்
x
தினத்தந்தி 21 Feb 2020 3:11 PM GMT (Updated: 21 Feb 2020 3:11 PM GMT)

உத்தரபிரதேசத்தில் மணமகனின் செயலால் மணமேடையிலேயே மணமகள் மாலையை உதறி விட்டு எழுந்த சம்பவம் நடந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர்கஞ்ச் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. மணமகன் ஒரு ராணுவ வீரர். திருமணத்துக்கு முதல் நாள் நடைபெறும் நிகழ்ச்சிகள் தடல் புடலாக நடந்து முடிந்தது. அடுத்த நாள் காலையில் மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு தயாராகினார்கள்.

மணமகனின் தங்கை உற்சாகமாக நடனமாடினார். இதை கண்ட மணமகனுக்கு சகோதரி மீது கடும் கோபம் ஏற்பட்டது. அருகில் இருந்த நாற்காலியை எடுத்து சகோதரியை அடித்தார்.

இதை பார்த்த மணமகள் மணமேடையிலேயே மாலையை உதறி விட்டு எழுந்தார். இவரை என்னால் திருமணம்
செய்துகொள்ள முடியாது என்று பகிரங்கமாக அறிவித்தார். 

‘இப்படி ஒரு முன் கோபக்காரருடன் என்னால் வாழ முடியாது. இப்போது அவர் சகோதரியையே இப்படி அடிப்பவர் நாளை திருமணத் துக்கு பின் என்னையும் இப்படித் தான் அடிப்பார். பெண்களை மதிக்க தெரியாத இதுபோன்ற நபர்களுடன் என்னால் வாழ முடியாது’ என்று திருமணத்தை நிறுத்திவிட்டார்.

மணமகன் குடிபோதை யில் இருந்ததாகவும் அதனால் தான் இப்படி நடந்துகொண்டதாகவும் தெரிய வந்தது. உறவினர்கள் சமாதானப்படுத்த முயன்றாலும் மணமகள்  அதை ஏற்கவில்லை.  தங்கள் வீட்டுக்கு திரும்பி விட்டார். மணப்பெண் வீட்டிற்கு சென்றதால் மணமகன் குடும்பத்தினர் செய்வதறியாது திருமணமண்டபத்தில் நின்றனர்.

Next Story