பிஷப் பிராங்கோ மூலக்கலுக்கு எதிராக மற்றொரு கன்னியாஸ்திரி பாலியல் புகார்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 22 Feb 2020 10:00 AM GMT (Updated: 22 Feb 2020 10:00 AM GMT)

பிஷப் பிராங்கோ மூலக்கலுக்கு எதிராக மற்றொரு கன்னியாஸ்திரி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறி உள்ளார்.

கோட்டயம் 

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ  மூலக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.  கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிறகு  பிராங்கோ  மூலக்கல் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிஷப் பிராங்கோ மூலக்கல் கூடுதல் கோட்டயம் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில்  மனு ஒன்று தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு விரைவில் பரிசீலிக்க உள்ள நிலையில் பிஷப்புக்கு எதிராக மற்றொரு கன்னியாஸ்திரி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக  கூறி உள்ளார்.

 வழக்கில் 14 வது சாட்சியாக கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரி, பிஷப்பிடமிருந்து பாலியல் தவறான நடத்தைகளையும் சந்தித்ததாக 2018 செப்டம்பர் 9 அன்று சந்தித்ததாக  விசாரணைக் குழுவிடம் கூறி உள்ளார்.

அந்த கன்னியாஸ்திரி  அறிக்கையின்படி, பிஷப் ஏப்ரல் 30, 2017 அன்று கண்ணூரில் உள்ள ஒரு கான்வென்ட்டில் அவரை பிடித்து முத்தமிட்டு உள்ளார்.

இது தவிர, பிஷப் 2015-2017 காலகட்டத்தில் பாலியல் அரட்டையிலும் ஈடுபட  அவரை கட்டாயப்படுத்தி உள்ளார்.

"நான் 2015 முதல் உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக தொலைபேசியில் பிஷப்புடன் தொடர்பு கொண்டேன்.. அதை அவர் பாலியல் அரட்டைகளை நடத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தினார், அது எனக்கு அருவருப்பாக இருந்தது என்று அவர் கூறினார்.

கன்னியாஸ்திரிகளின் கூற்றுப்படி, அவர் பாலியல் அரட்டையில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், சர்ச்சிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற பயத்தில் பிஷப்பை அவர் எதிர்க்கவில்லை.

இந்த நிலையில் பிஷப்புக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்த கன்னியாஸ்திரிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டுகள் குறித்து புதிய விசாரணை நடத்தக் கோரியுள்ளது.

Next Story