வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு


வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு
x
தினத்தந்தி 27 Feb 2020 7:58 AM GMT (Updated: 27 Feb 2020 7:58 AM GMT)

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

வெங்காய உற்பத்தி பற்றாக்குறையால் அதன் விலை கடுமையான உயர்வைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.  தட்டுப்பாடால் வெங்காயம் ஒரு கிலோ ரூ.150-க்கு மேல் விற்பனையானது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். நிலைமையைச் சமாளிக்க எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்து சந்தைக்குக் கொண்டுவந்தது. 

தற்போது வெங்காய உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளதால் நிலைமை சீராகியுள்ளது. கடந்த ஆண்டை விட நிகழாண்டு வெங்காய உற்பத்தி அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு, வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.  மத்திய உணவு விநியோகத் துறை அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான், வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், அமைச்சரவை செயலா் ராஜீவ் கவுபா  ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.  வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் சுற்றறிக்கை வெளியிட்டதும் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட  தடை நீக்கம் அமலுக்கு வரும் .

Next Story