யெஸ் வங்கியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 3 நாட்களில் தளர்த்தப்படும் - நிர்மலா சீதாராமன்
யெஸ் வங்கியில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 3 நாட்களில் தளர்த்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்,
யெஸ் வங்கியின் 49 சதவீத ஈக்விட்டி பங்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாங்குகிறது என்றும், மற்ற முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், உடனடி முதலீட்டு தேவைகளை சமாளிக்க ஆயிரத்து 100 கோடி ரூபாயாக இருந்த அதிகாரப்பூர்வ மூலதனம், 6 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யெஸ் வங்கியின் மறுகட்டமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட 3 தினங்களில், வங்கி மீதான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என்றும், 7 தினங்களில் எஸ்பிஐ வங்கியின் இயக்குனர்கள் தலைமையிலான புதிய நிர்வாக குழு, வங்கியின் நிர்வாகத்தை கையில் எடுக்கும் என அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story