இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 March 2020 12:50 PM GMT (Updated: 17 March 2020 12:50 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 107 ஆக அதிகரித்து இருந்தது.  இந்த எண்ணிக்கை நேற்று 114 ஆகவும், இன்று 125 ஆகவும் உயர்ந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த எண்ணிக்கை 137 ஆக இன்று உயர்ந்துள்ளது.  இவர்களில் மராட்டியத்தில் அதிக அளவாக 39 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இவர்களில் 36 பேர் இந்தியர்கள்.  3 பேர் வெளிநாட்டவர்கள்.  இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

2வது இடத்தில் கேரளா உள்ளது.  கேரளாவில் இந்தியர்கள் 24 பேருக்கும், வெளிநாட்டினர் 2 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்களில் 3 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் இந்தியர்கள் 14 பேருக்கும், வெளிநாட்டினர் ஒருவருக்கும் என 15 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  5 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

அரியானாவில் இந்தியர்கள் ஒருவருக்கும், வெளிநாட்டினர் 14 பேருக்கும் என 15 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது.

கர்நாடகாவில் 11 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளதுடன் அவர்களில் ஒருவர் பலியாகி உள்ளார்.

இதன்பின்னர் டெல்லியில் 8 இந்தியர்களுக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.  அவர்களில் 2 பேர் சிகிச்சை முடிந்து சென்றனர்.  ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் 6 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது.  தெலுங்கானாவில் இந்தியர்கள் 3 பேர், வெளிநாட்டினர் 2 பேர் என 5 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது.  அவர்களில் ஒருவர் சிகிச்சை முடிந்து சென்று விட்டார்.

ராஜஸ்தானில் இந்தியர்கள் 2 பேர், வெளிநாட்டினர் 2 பேர் என 4 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது.  இவர்களில் 3 பேர் சிகிச்சை முடிந்து சென்று விட்டனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 3 பேருக்கும், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவருக்கும் நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

Next Story