தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் நேரடி தரிசனம்: வரிசையில் காத்திருக்க தேவையில்லை + "||" + Thirupathi Ezhumalayanai devotees live vision: No need to wait in line

திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் நேரடி தரிசனம்: வரிசையில் காத்திருக்க தேவையில்லை

திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் நேரடி தரிசனம்: வரிசையில் காத்திருக்க தேவையில்லை
திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமலை,

கொரோனா வைரஸ் எதிரொலியாக திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் புதிய ஏற்பாட்டை செய்து இருந்தது. இதற்கான ஒரு அடையாள கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கார்டு உள்ளவர்கள் இவ்வாறு நேரடி தரிசனத்துக்கு அனுமதிக்கபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்த பக்தர்கள் திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருக்க வேண்டாம். அவர்கள் உடனடியாகக் கோவிலுக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் தேதியை மாற்றிக்கொள்ளலாம். பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்த 300 ரூபாய் டிக்கெட்டை ரத்து செய்தும் கொள்ளலாம். அதற்கான பணம் பக்தர்களுக்கு திருப்பி வழங்கப்படும். மே மாதம் 31-ந்தேதி வரை 300 ரூபாய் டிக்கெட் மாற்றம், ரத்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.


தொடர்புடைய செய்திகள்

1. உடல் நலக்குறைவுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம்
உடல் நலக்குறைவுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா வைரஸ் எதிரொலி: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு பரிசோதனை
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சோதனைக்கு பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
3. குடமுழுக்கையொட்டி சோதனை அடிப்படையில் போலீசார் பறக்க விட்ட ஆளில்லா குட்டி விமான கண்காணிப்பு கேமரா கீழே விழுந்ததால் பரபரப்பு
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கையொட்டி சோதனை அடிப்படையில் போலீசார் பறக்க விட்ட ஆளில்லா குட்டி விமான கண்காணிப்பு கேமரா கீழே விழுந்தது. கோவில் வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
4. திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு வழங்கப்பட உள்ளது.
5. சபரிமலை சீசனையொட்டி குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
சபரிமலை சீசனையொட்டி குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.