மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு போதிய உதவி கிடைக்கவில்லை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு போதிய உதவி கிடைக்கவில்லை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 March 2020 8:11 AM GMT (Updated: 20 March 2020 8:11 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க மத்திய அரசு போதிய உதவியை அளிக்க மறுப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தா,

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 834 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்கின்றன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க , மேற்கு வங்கத்திற்கு ,மத்திய அரசு  போதிய உதவியை அளிக்க மறுப்பதாக  மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தில், மருத்துவமனை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த  மம்தா பானர்ஜி கூறியதாவது;- “2 லட்சம் முகக்கவசங்கள், 30 ஆயிரம் கையுறைகளை வாங்க மாநில அரசு சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு போதிய கிடைக்கவில்லை. 10 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர்கள் மற்றும் 300 சுவாசக்கருவிகளை வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது” என்றார். 

Next Story