தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: உலகளவில் பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது + "||" + Worldwide deaths surged past 13,000 on Saturday

கொரோனா வைரஸ் பாதிப்பு: உலகளவில் பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா வைரஸ் பாதிப்பு: உலகளவில் பலி  எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஜெனீவா, 

உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளையே ஆட்டம் காட்டி வரும் இந்த வைரஸ், இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளன, பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, விமானம், பேருந்து, ரயில், கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கிக்கிடக்கின்றன. கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி  உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 13,025 ஆக உயர்ந்துள்ளது.