சுய ஊரடங்கை மீறி வெளியே வந்த மக்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து போலீசார் அறிவுரை


சுய ஊரடங்கை மீறி வெளியே வந்த மக்களுக்கு  ரோஜாப்பூ கொடுத்து போலீசார் அறிவுரை
x
தினத்தந்தி 22 March 2020 4:22 AM GMT (Updated: 22 March 2020 4:22 AM GMT)

சுய ஊரடங்கை மீறி வெளியே வந்த மக்களுக்கு, பூக்கள் கொடுத்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை  ”மக்கள் ஊரடங்கு” கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.  கொரோனா வைரசில் இருந்து நாட்டைக் காப்பதற்கான முயற்சியின் சோதனையாக இது அமையும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மக்கள் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில்கள், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. எனினும், சில இடங்களில் மக்கள், சுய ஊரடங்கை மீறி வெளியில் வருவதைக் காண முடிகிறது. டெல்லியில்  இவ்வாறு, வெளி வந்த  மக்களுக்கு, ரோஜாப்பூ கொடுத்த போலீசார்,  ”மக்கள் ஊரடங்கு” காரணமாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினர். 

Next Story