தேசிய செய்திகள்

மேலும் பல வீரர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ராணுவம் அறிவுரை + "||" + The Army advises many more soldiers to work from home

மேலும் பல வீரர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ராணுவம் அறிவுரை

மேலும் பல வீரர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ராணுவம் அறிவுரை
மேலும் பல வீரர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ராணுவம் அறிவுரை வழங்கி உள்ளது.
புதுடெல்லி,

ராணுவ வீரர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ராணுவத்தில் 35 சதவீத அதிகாரிகளையும், 50 சதவீத இளநிலை அதிகாரிகளையும் வீட்டில் இருந்து பணியாற்றுமாறு கடந்த வாரம் ராணுவம் கேட்டுக்கொண்டது.


இந்நிலையில், நேற்று மேலும் பல ராணுவ வீரர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தி இருப்பதாக ராணுவம் கூறியது. ஆனால், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள வீரர்கள், தொடர்ந்து அலுவலகத்துக்கு வருவார்கள். தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 82 மாவட்டங்களில் ராணுவத்தினரின் பயணத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ராணுவ சிற்றுண்டியகங்கள் மூடப்பட்டு இருக்கும்.