பஞ்சாபில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய 90 ஆயிரம் பேர்;கொரோனா வைரஸ் அதிகரிக்க வாய்ப்பு


படம்: bloomberg
x
படம்: bloomberg
தினத்தந்தி 24 March 2020 6:55 AM GMT (Updated: 24 March 2020 6:55 AM GMT)

பஞ்சாப் மாநிலத்தில் வெளிநாட்டில் இருந்து 90 ஆயிரம் பேர் திரும்பி உள்ளனர். இதனால் வரும்காலத்தில் கொரோனா வைரஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

புதுடெல்லி: 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் வெளிநாட்டில் வசித்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த சுமார் 90,000 பேர் நாடு திரும்பி வந்துள்ளனர். இப்போது, மாநிலத்தில் வைரஸ் பரவாமல் இருக்க அதிக நிதி தேவைப்படுகிறது.  பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்காக மாநில முதல் மந்திரி அமரீந்தர் சிங் மத்திய அரசிடம் இருந்து ரூ .150 கோடி நிதி கோரி உள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனுக்கு மாநில சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்து எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

பஞ்சாபில் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக  வெளிநாட்டில் உள்ளனர். அவர்களில் 90,000 பேர் மட்டுமே இந்த மாதத்தில் தாயகம் திரும்பி உள்ளனர். பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் உள்ளன. இதனால் நோய் பரவுகின்றன இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் அதிகரிக்கப் போகிறது என கூறி உள்ளார்.

இதுவரை 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் பலியாகி உள்ளார்.

நாட்டில்  ஊரடங்கு உத்தரவை அறிவித்த முதல் மாநிலமாக பஞ்சாப் திகழ்ந்தது, மேலும் அதை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கி உள்ளது.

குடிமக்களை தெருக்களிலோ அல்லது பொது இடங்களிலோ பார்த்தால் கைது செய்யப்படுவீர்கள் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனது டுவிட்ட்ரில் கூறி இருப்பதாவது:-

கடந்த சில நாட்களில், வீட்டு தனிமைப்படுத்தலை மீறுபவர்களுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் அனைவரின்  நலனுக்காகவே எடுக்கப்பட்டு உள்ளன. எல்லோரும் ஒத்துழைக்கிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு  சிலர் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து அச்சுறுத்துகின்றனர் என கூறி உள்ளார்.

மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல்களுக்காக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில், அதிகபட்ச வழக்குகள் - 26 - சண்டிகருக்கு அருகிலுள்ள மொஹாலியில் பதிவாகி உள்ளது.

Next Story