தேசிய செய்திகள்

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - குஜராத் அரசு அறிவிப்பு + "||" + Gujarat class 1 to 9 students to be mass-promoted to upper class

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - குஜராத் அரசு அறிவிப்பு

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - குஜராத் அரசு அறிவிப்பு
குஜராத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
காந்திநகர்,

நாடு முழுவதும் கெரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குஜராத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முன்னதாக, உத்தர்பிரதேசத்திலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.